இந்திய அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது .இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்தது. இதனால் 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் […]
