ஆப்கானிஸ்தானில் 35 லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா சபை தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கைப்பற்றினர். எனவே ஆப்கானிஸ்தானிற்கு, அளிக்கப்பட்ட சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டது. மேலும், பிற நாடுகளில் இருக்கும் அந்நாட்டிற்குரிய சொத்துகளையும் முடக்கினர். எனவே, அந்நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், கலவரம், தீவிரவாத தாக்குதல்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அங்கு அகதிகளாக இருக்கும் 35 லட்சம் மக்கள் பசியால் வாடிக் கொண்டிருப்பதாக அகதிகளுக்கான உயர் ஆணையம் கூறியிருக்கிறது. […]
