யாஷ் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையை கடந்தது. இந்து புயலுக்கு யாஷ் என்று பெயரிடப்பட்டது. இதையடுத்து இந்தப் புயலின் காரணமாக மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. இந்த புயல் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. […]
