தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை எதிரொலியாக இன்று திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
