சங்ககிரி அருகே தாய்ப்பால் குடித்துவிட்டு தொட்டிலில் தூங்கிய போது 3 மாத குழந்தை புரையேறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி அருகே வெள்ளக்கரடு சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 22). இவர் கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த சவுந்தர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வயது 17. இவர்களுக்கு விதுலியா என்ற 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் […]
