மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம் கச்ரோத் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்வாதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் பதறியடித்த உறவினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் காவல்துறையினர் […]
