பெங்களூருவில் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தததில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியிலுள்ள லக்கசந்திரா ரோட்டில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. இந்த வீடு மூன்று மாடிகளை கொண்டதாகும். இந்த வீடு 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வீடு இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த […]
