உலக சுகாதார மையம், கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் மூன்று மருந்துகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக சுகாதார மையத்தின் சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய மருந்தை கண்டறிவதற்கான ஆய்வு 52 நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் ரெம்டெசிவிர் உட்பட நான்கு மருந்துகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. அவை பயனளிக்கவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே, வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய மூன்று மருந்துகளை அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்போவதாக உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, மலேரியாவை குணப்படுத்தக்கூடிய அர்டிசுனேட், புற்றுநோய்க்கு […]
