பெண்களிடம் கடன் தருவதாக கூறி 1.44 கோடி மோசடி செய்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், சேரன்மகாதேவி பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் நிதி நிறுவனம் தொடங்கி குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி பெண்கள் பலரிடம் முன் பணம் […]
