உத்திரபிரதேசத்தில் 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் இருந்து டெல்லி நோக்கி ஒரு தனியார் சொகுசுப் பேருந்து நேற்று இரவு 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்தப் பேருந்து இன்று அதிகாலை அலிகார் என்ற மாவட்டத்தில் உள்ள தபால் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து […]
