அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் இரட்டைக் குழந்தைகளும், பிரசவித்த தாயும் பலியாகினர். இந்நிலையில் 3 அரசு மருத்துவமனை செவிலியர்களும், மருத்துவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், 3 செவிலியர்களையும், மருத்துவரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு 3 பேர் அடங்கிய விசாரணைக்குழுவையும் அவர் நியமித்துள்ளார். அரசு ஆஸ்பத்திரியின் ஊழியர்கள், நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள […]
