ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் காவல்துறையினர் ஓர்ந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கடம்பங்குளம் விலக்கு சாலையில் சிலர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை பிடித்து சோதனை செய்த போது பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மேலக்கன்னிசேரி பகுதியை சேர்ந்த அருண்குமார், இளையாங்குடி பகுதியை சேர்ந்த […]
