ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து […]
