கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு டிரக் ஓட்டிய ஓட்டுனர், பைக் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று கர்நாடகாவில் ஹாசன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் தன்னுடைய மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சிவானந்தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த ட்ரக் ஒன்று அவர்கள் மீது மோதியது. ட்ரக் மோதியதில் 4 பேரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். […]
