போலி நகைகளை வைத்து மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரெயின்போ நகரைச் சேர்ந்த சசிகுமார் கோட்டகுப்பம் அருகே உள்ள சின்ன முதலியார் சாவடியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகின்ற நிலையில் இவரின் கடைக்கு சென்ற 20 ஆம் தேதி பொம்மையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கங்கா என்பவர் 10 கிராம் வளையலை அடகு வைத்து 30 ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளார். […]
