இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள உழவர்பட்டியில் முருகேசன் (50) என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழில் செய்து வரும் இவர் தனது மகன் ஜீவா (24) மற்றும் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு நன்செய் இடையாற்றில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பொய்யேரி […]
