ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வேப்பங்குளத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி தங்கம், மகள் வாசுகி(24). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இவர்களது உறவினரான முருகன் என்பவருடன் குடும்பத்தகராறு காரணமாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முருகனுக்கும் தங்கம், வாசுகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் தங்கம், வாசுகி மற்றும் அவரது உறவினரான […]
