ரஷ்யாவில் பிரபல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 நோயாளிகள் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். ரஷ்யாவின் ரியாசான் நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து மளமளவென பற்றி எரிந்த அந்த தீயால் மருத்துவமனையில் உள்ளவர்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சையில் […]
