ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் முடிவை விமர்சித்து நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது வருந்தத்தக்கது, வெட்கக்கேடானது, மற்றும் முற்றிலும் நியாயமற்றது எனவும் குறிப்பிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பதிலாக […]
