தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசரும், துணைத் தலைவர்களாக கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் இருக்கிறார்கள். அதன்பிறகு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக நடிகர் விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும் இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 முறை பாண்டவர் அணி வெற்றி பெற்று பதவியை கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நாசர் தலைமையில் நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வந்த நிலையில் 70% பணிகள் நிறைவடைந்தது. […]
