இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடும் தமிழக வீரர் நடராஜனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆஸ்திரேலியா தலைநகரான கான்பெர்ராவில் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜன், இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணிக்காக முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நடராஜன் விளையாடுவதால் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]
