மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தகவல் வெளியிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. மராட்டிய மாநிலத்தில் 2-வது அலையாக வீசப்படும் கொரோனா பரவலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மே மாத இறுதியில் நோய் பரவல் குறையும் என்றும் அதன்பின் […]
