தலைமைச் செயலகம், மத்திய ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அரசுத் தலைமைச் செயலகம், மத்திய ரயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கடந்த 2007ஆம் ஆண்டு மைசூரைச் சேர்ந்த ஸ்டாலின் சாஜின் (37) என்பவர், வேறு ஒருவரின் பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியிருந்தார். […]
