அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மூன்று வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் 29 ஆம் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 29-ஆம் மாடியிலிருந்து ஒரு 3 வயது குழந்தை தவறி விழுந்திருக்கிறது. குழந்தை விழுந்த சத்தம் பயங்கரமாக கேட்டதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறியிருக்கிறார்கள். உடனே வெளியில் வந்து பார்த்தபோது, அந்த குழந்தையின் தாயார், “ஐயோ, என் குழந்தை” என்று கதறி அழுததாக கூறப்பட்டுள்ளது. […]
