மதுரையை சேர்த்த அபிநயா என்ற பெண் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலமாக சுமார் 28 ஆண்களுக்கு காதல் வலை வீசி வீழ்த்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 28 ஆண்களில் நான்கு பேரை அவர் திருமணம் செய்துள்ளார். நான்காவது திருமணம் செய்பவரிடம் இருந்து 30 நாட்களில் பல சவரன் நகைகளுடனும் பணத்துடனும் தலைமறைவாகியுள்ளார். பல மாதங்களாக இதையே வாடிக்கையாக கொண்டிருந்த இவர் சமூக வலைத்தளத்தில் முதலில் நண்பராக பழகி பின்பு காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். […]
