சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கியில் உள்ள ஒரு பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 28 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சுகாதார அமைச்சர் கூறியதாவது. இந்த விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
