சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று கணவர் வீட்டார் கூறி சித்திரவதை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி கே.எம்.எஸ். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பாலமுருக கணேஷ் என்பவருக்கும், போடி மதுரை வடக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் என்பவரின் மகள் 27 வயது லிங்கேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. […]
