ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்த காவல்துறையினர் 2,750 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் சரக்கு […]
