வீட்டில் தனித்திருந்த மூதாட்டியிடம் 26 பவுன் நகையை பறித்துகொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி தனியே வசித்து வருகிறார். இவருடைய மகன் அதே பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மூதாட்டி தனது வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஒருவன் மூதாட்டியின் முகத்தை […]
