இந்தியாவில் பைஜூஸ் நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றுவதற்காக 2500 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனத்தின் லாபம் 231.69 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ரூ. 4,588 கொடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனத்தின் செலவுகள் ரூ. 2,874.34 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் ரூ. 7,027.47 கோடியாக செலவுகள் அதிகரித்துள்ளது. […]
