இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் தன் மகளின் திருமணத்தை இந்தோனேசியாவில் சுமார் 250 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் டிஆர்எஸ் என்ற கட்சியினுடைய முன்னாள் எம்.பியான பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தன் மகள் ஸ்வப்னா ரெட்டியின் திருமணத்தை இந்தோனேசியா நாட்டிலுள்ள பாலி தீவில் மிக பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார். இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 500 நபர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து திருமணத்தில் விடுபட்ட நபர்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவழைத்திருக்கிறார். […]
