ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு தன்னுடைய மகன் பிரவீனுடன் அங்கு உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் வேதசத்தையா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் சிறுவன் பிரவீன் 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கினான். ஆனால் அவனது தந்தை மோகனிடம் பணம் இல்லாததால், வேர்க்கடலை பொட்டலத்தை பிரவீன் திருப்பி வேர்க்கடலை வியாபாரியிடம் கொடுத்துள்ளார். ஆனால் வியாபாரி நாளைக்கு வந்து கொடுங்கள் என்று கூறினார். மறுநாள் மோகன், பிரவீன் இருவரும் […]
