கலெக்டர் அரவிந்த் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு கொடுத்தார். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் இருக்கின்ற கல்குளம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 4 தினங்களாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் கல்குளம் தாசில்தார் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார் மாரியப்பன், தலைமை நிலஅளவர் கிரிதர் உட்பட பலர் பங்கேற்றனர். இதனையடுத்து கலெக்டர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். […]
