மீன்வளத்துறையில் 25 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . சென்னை ஆலந்தூரில் உள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை தலைமை இயக்குனரிடம் திமுக எம்எல்ஏ அப்பாவு அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உபரி கடற்கரை கிராமத்தில் தூண்டில் வலை அமைக்கும் திட்டத்தில் 65கோடி ரூபாய் திட்டத்தில் 25கோடி பணத்தை அமைச்சர் ஜெயக்குமார் கொள்ளையடித்து விட்டதாக குற்றம் சாட்டினார். […]
