குழந்தைகளை தூக்கி சென்ற சம்பவத்திற்கு பிறகு வனத்துறையினர் கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்துள்ளனர். தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிக்கும் ராஜன்-புவனேஸ்வரி என்பவரின் இரட்டை குழந்தை பிறந்து 8 நாளே ஆன நிலையில் குரங்கு ஒன்று வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று அந்த குழந்தையை தூக்கி சென்றது. இதில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தை குளத்தில் விழுந்து பலியானது. குரங்குகளின் அட்டகாசம் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து […]
