இளவரசி டயானாவின் மரணம் இன்று வரை விலகாத மர்மமாகவே இருக்கிறது. இங்கிலாந்தில் மக்களின் இளவரசி என்று அன்போடு அழைக்கப்பட்ட டயானா கடந்த 1961-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நார்போக் நகரில் ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுன்டஸிற்கு மகளாகப் பிறந்தார். இவர்களுடைய குடும்பம் இயர்ல் ஸ்பென்சர் என்று அழைக்கப்பட்டது. இளவரசி டயானா தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த பிறகு சுவிட்சர்லாந்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு லண்டனில் உள்ள கிண்டர் கார்டனில் உதவியாளராக பணிபுரிந்தார். […]
