Categories
அரசியல் மாநில செய்திகள்

இளைஞர்களே டிச.,25 கடைசி நாள்…. உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு….!!!

திமுக இளைஞரணி மாவட்ட பொறுப்புகளில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகநீதி இயக்கமான திமுகவின் முதன்மை அணியான இளைஞர் அணியின் மாவட்ட அளவில் வழிநடத்தி செல்லும் அமைப்பாளர், து. அமைப்பாளர் பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்படவுள்ளனர். விண்ணப்பத்திற்கான கடைசி நாள் டிச.,25 என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்கும்….. அது இது தானோ…. வருஷா வருஷம் வீட்டுக்கு வரும் பணம்….!!!!

லக்கி ஃபார் லைஃப் என்றொரு அதிர்ஷ்டப் போட்டி அமெரிக்காவில் உண்டு. இதில் பல மாதங்களாக ஒரே நம்பர்களுடன் விளையாடினார் மிச்சிகனைச் சேர்ந்த நபர். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பதுபோல் அந்த நபருக்கு ஆண்டுக்கு 25,000 டாலர் என்ற வாழ்நாள் முழுமைக்குமான லக்கி ஃபார் லைஃப் லாட்டரி அடித்துள்ளது. அவர் பெயர் ஸ்காட் சிண்டர்( 55).ஒரு கேஸ் நிரப்பும் மையத்தில் தான் இந்த விளையாட்டை விளையாண்டிருக்கிறார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் இந்த […]

Categories
மாநில செய்திகள்

சாட்டை துரைமுருகன் இனி வாயைத் திறக்கக் கூடாது – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

தமிழக, கேரள முதலமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் இருக்கும் சாட்டை துரைமுருகனுக்கு, பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியை உடைத்து கற்கள், ஜல்லி உள்ளிட்டவற்றைச் சட்டவிரோதமாகக் கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சாட்டை துரைமுருகன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியதோடு, […]

Categories
மாநில செய்திகள்

கலை, அறிவியல் கல்லூரிகளில்…. 25% மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு…. உயர்கல்வித்துறை அனுமதி…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக சேர்ப்பதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு 25% கூடுதல் இடங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது உயர்கல்வித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பால் […]

Categories
மாநில செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

வீட்டு உபயோகத்திற்கான பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகள் நிறுத்தம்…. தமிழகத்தில் அதிர்ச்சி அறிவிப்பு..!!

பயணிகளின் வருகை குறைந்து உள்ள காரணத்தினால் நீண்ட தூர போக்குவரத்திற்கு கணிசமான எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

இந்த கட்டணம் கொடுத்தால்…”30 நிமிடத்தில் உங்கள் வீடு தேடி வரும்”… அறிமுகமான புதிய சேவை..!!

இந்தியன் ஆயில் நிறுவனம் முன்பதிவு செய்த 30 நிமிடத்தில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும் என்று கூறியுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் தட்கல் எல்பிஜி சேவையை தொடங்கியுள்ளது. இதன்படி எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்த 30 முதல் 40 நிமிடத்தில் வீட்டுக்குள் வரும். பொதுவாக சிலிண்டர் முன்பதிவு செய்து இரண்டு அல்லது நான்கு நாட்களுக்குள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் தட்கல் முறையை பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாக […]

Categories

Tech |