உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய குடிமக்களை வெளியேற்ற உதவுவதற்காக 24×7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள தனது நாட்டு மக்களை மீட்பது தான் இந்தியாவைப் பொறுத்தவரை தற்பொழுது பெரிய சவாலாக மாறி இருக்கிறது. உக்ரைனில் 16 ஆயிரம் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் சிக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் உக்ரைனின் வான் பகுதி மூடப்பட்டதால் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து தலை நகரங்களான முறையே […]
