வடக்கு புர்கினா பாசோ நாட்டில் உள்ள தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு மட்டுமில்லாமல் 18 பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு புர்கினா பாசோ நாட்டில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர ஆராதனையின் போது, பன்சி கிராமவாசிகள் மீது ஆயுதங்களோடு வந்த பயங்கரவாதிகள் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பிராந்திய ஆளுநர் கர்னல் சல்போ கபோரே […]
