கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நத்தமேடு காலனி பகுதியில் நாகராஜன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திக்ராஜ் மற்றும் நித்திஷ் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கிருத்திக்ராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி தெருபட்டி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றிருந்த தங்களது தாத்தாவிற்கு உணவு கொடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் சென்றுள்ளனர். அதன்பின் தாத்தாவுக்கு உணவு கொடுத்து […]
