தமிழக காவல்துறையில் கடந்த 9 மாதங்களில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். தற்கொலை, கொரோனா உள்ளிட்ட காரணங்களினால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 1 லட்சம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் சேர்த்து காவல்துறையில் மொத்தம் 1,13,000 பேர் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் காவல்துறையில் பணிச்சுமை அதிகரித்து உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்புகள் அதிகமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், அக்டோபர் மாதம் 3-ம் தேதி வரை 238 பேர் உயிரிழந்துள்ளனர். […]
