இந்தியாவில் வரும் கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது பல்கலைக்கழக மானிய குழு 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றின் மூலமாக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றது. அதன்படி செயற்கை நுண்ணறிவு,இணைய பாதுகாப்பு மற்றும் குழந்தை பருவ பராமரிப்பு முதலான 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி படிப்புகள் இந்த இணையதளத்தில் இலவசமாக வழங்கப்படுவதாக பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. […]
