வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் அருகிலுள்ள பாய்லர் ஆலையில் பொறியாளராக அருண்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் ஆலை குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் அருண்குமாரின் குடும்பத்தினர் மானாமதுரையில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அருண்குமார் […]
