Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் பயங்கரம்…. ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகு…. 23 பேர் உயிரிழப்பு….!!!

வங்காளதேச ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.  வங்காளதேசம் அருகே உள்ள ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. இந்த படகு  அதிக பாரம் ஏற்றிச்சென்றதால்  கவிழ்ந்ததா? அல்லது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கவிழ்ந்ததா என்ற விவரம் தெரியவில்லை. மேலும்  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

ரஷ்யத்தாக்குதல்…. குழந்தைகள் உட்பட 23 பேர் பலி… உலக நாடுகள் கண்டனம்…!!!

உக்ரைன் நாட்டின் வின்னிட்சியாஎன்ற பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா, கடந்த வியாழக்கிழமை அன்று இரவு நேரத்தில் வின்னிட்சியா பகுதியில் திடீரென்று வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது. இதில், மருத்துவமனைகள், கலாச்சார மையம் மற்றும் வீடுகள் தகர்க்கப்பட்டன. மேலும், குழந்தைகள் மூன்று பேர் உட்பட 23 நபர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!… அதிகரிக்கும் டெங்கு மரணம்…. அரசு வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவிவருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்கள் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 23 பேர் இந்த […]

Categories
உலக செய்திகள்

“வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பேருந்து!”… திருமணத்திற்கு சென்ற போது நேர்ந்த பரிதாபம்… 23 பேர் பலியான சோகம்..!!

கென்யாவில் திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 23 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீப தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில், நடந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள,  ஒரு தேவாலயத்தின் பாடகர் குழுவினர், பேருந்தில் பயணித்துள்ளனர். அப்போது, பேருந்து, கிடுய் கவுண்டியில் இருக்கும் என்சியூ ஆற்றின் பாலத்தின் மீது ஓடிக்கொண்டிருந்த வெள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளச்சாராயம்” 23 பேர் உயிரிழப்பு…. 700 அதிகாரிகள் பணியிடை நீக்கம்….!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 23 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்ததுடன் 700 அரசு அதிகாரிகள் இதன் காரணமாக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பீகார் அமைச்சர் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்ற நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பாரன் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி 2 நாட்களில் 23 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 -ற்கும் மேற்பட்டோர் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ… வெடித்து சிதறிய பட்டாசுகள்… 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பட்டாசு குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்து சிதறி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள குசிநகர் மாவட்டம் கப்தன்கஞ்ச் என்ற பகுதியில் ஒரு பட்டாசு குடோனில் இருக்கிறது. அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த உயர் ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மூன்று பேர் பலத்த தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவை விட்டு சென்ற மக்கள்… கடலில் கவிழ்ந்த படகு… 21 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால், தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கடல்வழி பயணம் மேற்கொண்டு செல்கிறார்கள். இவ்வாறான ஆபத்து நிறைந்த கடல் வழி பயணங்களை மக்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

மாலியில் கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்… 23 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

மாலி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய தாக்குதலால் ராணுவ வீரர்கள் உட்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.அதனால் பொதுமக்கள் மீது குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு […]

Categories

Tech |