யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வாத் என்னும் இடத்திலிருந்து கிளம்பிய பேருந்து தாடு என்ற பகுதி நோக்கி சென்றுள்ளது. இதனையடுத்து யாத்ரீகர்கள் புனித பயணம் செய்வதற்காக அந்தப் பேருந்தில் பயணித்துள்ளனர். இந்நிலையில் பேருந்து குஜ்தார் மாவட்டத்தில் சென்றுகொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த யாத்ரீகர்களில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். […]
