இங்கிலாந்தில் 6 வயதுடைய ஒரு சிறுமி 23 காந்தங்களை விழுங்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுமி, டிக்டாக்கில் ஒரு சவாலை மேற்கொண்டுள்ளார். அதற்காக, 23 காந்தங்களை ஒரே சமயத்தில் விழுங்கியிருக்கிறார். இதனால், சிறுமி வயிற்றுவலி, குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுள்ளார். எனவே, சிறுமியின் பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தனர். அதன்பின்பு, வயிற்றிலிருந்த 23 காந்தங்களை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். […]
