மியான்மரில் உள்ள யாங்கூன் நகரின் 2 முக்கிய பகுதிகளில் ராணுவ சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போன்ற அடக்குமுறைகள் கையாளப்பட்டது. இருப்பினும் நாளுக்கு நாள் ராணுவத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வலுவடைந்து கொண்டுதான் இருக்கிறது. […]
