பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஒரு மாட்டுப் பண்ணையில் கால்நடை நோய் கண்டறியப்பட்டதால் சுமார் 219 பசுக்கள் கொல்லப்படவிருக்கிறது. பிரான்சில் ஒரு மாட்டு பண்ணையில், ஒரு பசுவிற்கு பொவைன் புரூசெல்லாசிஸ் என்ற நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, நாட்டின் வேளாண்மை துறை அமைச்சகமானது, உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நோயானது கால்நடைகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களையும் தாக்கக்கூடிய தொற்றுநோய். இந்நோய் புரூசெல்லா என்ற பாக்டீரியாவிலிருந்து உருவாகிறது. நாய்கள், பன்றிகள், ஆடு மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற கால்நடைகளை இந்த பாக்டீரியா தாக்கும். […]
