மத்திய அரசிற்கு அதிக அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்படை இதற்கு முன்பே 60-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை சிறைப் பிடித்தது. தற்போது, அவர்கள் விடுவிக்கப்பட இருக்கும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்திருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த செயல் கடுமையாக […]
