சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடிய 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கம்பனூர் விளக்குப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தோப்பில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சிலர் சூதாடும் ஆடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சூதாட்டம் ஆடிய சுந்தரமாணிக்கம் உள்ளிட்ட 21 பேரை கைது செய்தனர். மேலும் […]
